Wednesday, August 10, 2011

நாமும்... இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....

எங்கே போகின்றோம் நாம்.................
மனோவின் விமர்சனத்தில் தொடங்கி .....
க், த் என்று .... முழுதாய் தெரியாத
இலக்கியம் பேசி.....


பேக் வாட்டர் , பிரன்ட் வாட்டர் ... என்று
எடுத்துக்காட்டாய் ..
ஒரு சினிமா சொல்லி.....

பேச தொடங்கிய கருத்தை
பேசாமல் விட்டு...

எதோ ஒன்றை பேசும்..
நாமும்...
இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....

தயை கூர்ந்து இங்கே.. யாரும்
என்னை அறிவாளி என்று
ஒப்புக்கொள்ளாதிர் .....

என்னை என்பது என்னை அல்ல ..
இதை எழுதும் என்னையும் ..
படிக்கும் உன்னையும் ....... தான் ....

Saturday, August 6, 2011

எங்கேனும் எப்போதும்

எங்கேனும் எப்போதும்
நான் உன்னை சந்தித்தால்

என்ன செய்து விடுவேன்..
கீழ் காணுபவற்றை மீறி......?...

அநேகமாய் .........
அடித்துக்கொண்டிருக்கும் சிகரட்டை
மறைக்க எத்தனிப்பேன்...!

அநேகமாய் .........
உன் குழந்தையின் கன்னங்கள் கிள்ளி
பெயரென்ன என்று கேட்டுகொண்டிருப்பேன் .......

அநேகமாய்.....
நீ எங்கே .. இங்கே ? என்றும் ..
வினவியிருபேன் ......

அநேகமாய்....
உனக்கு தெரிந்தே இருந்தாலும்..
என்னை
'நல்லா இருக்கியா.....?'
என்றொரு கேள்வி நீ கேட்பாய்
என்று எண்ணி கொண்டுருந்திருப்பேன்........

இன்னும் ஆயிரம் அநேகமாய் .....
அடி மனதில் இருந்தாலும் .....
அவைகளை சொல்லாமல் ...
நான் விழி பிதுங்கி நிற்க

நீ சொல்லும்
'போயிட்டு வரேன் ' ..
எனக்கு போதுமானது......

Friday, February 11, 2011

பயணம் -என் கருத்து

விமர்சனம் பண்ணும் அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை , அதும் இல்லாமல் பதிவில் நிறைய பேர் விமர்சனம் என்கிற பெயரில் தங்களது கருத்துக்களையே சொல்லிவருவதாலும், இனி விமர்சனம் என்று எழுத வேண்டாம் என்பதால் , பயணம் திரைப்படத்தைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்..

பயணம்- ரொம்ப நல்லா இருக்கு ... நம்பி போய் பார்க்கலாம்.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௩ )

இனியவை நாற்பதில் இரண்டாம் பத்து..

போரில் மகளிர்..( இந்த ஊர்தி ஊர்வலம் வரும்பொழுது பெண்கள் போர் புரிவதுபோல் நடித்துக்காட்டி வந்தார்களாம் )
நிற வேறுபாடால் மனிதன் வேறுபடுவதில்லை ..
பகிர்ந்து உண் ..














மணி மேகலை..

கண்ணகி ..

மனுநீதிச் சோழன் ...


நட்பிலக்கணம். கோப்பெருஞ்சோழன் , பிசிராந்தையார்..


மயிலுக்கு போர்வை தந்த பேகன் ..

குமணப்புலவரின் காலில் விழுந்து வணங்கும் மன்னன்..


பொற்கை பாண்டியன்...

...................................................................................................................................................................

அடுத்த பதிவில் அடுத்த பத்து இனிக்கும் .....

அன்புடன்
பொன்.சிவா

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௩ )

இனியவை நாற்பதில் பத்து..

நடந்து கொண்டிருக்கும் செம்மொழி மாநாட்டில் என்னை மட்டும் இல்லாமல் வரும் அனைவரையும் கவர்ந்தது 'இனியவை நாற்பது ' எனும் தலைப்பில் நடந்த அலங்கார ஊர்திகள் தான் ..! இந்த ஊர்திகள் மாநாட்டு திடலின் எதிரே உள்ள 'சி ஐ டி' கல்லுரி வளாகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ... மாநாடு முடிந்த பின்னும் ஒரு வாரம் மக்கள் பார்வைக்கு இவைகள் இருக்கும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார்... இதைக் காண முடியாதவர்களுக்கு என்னால் இயன்றது இந்த படப்பதிவு.. பத்து பத்தாக பதிவிட முடிவெடுத்துள்ளேன் ....


தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் வருட சிறப்பை உணர்த்தும் விதமாக...



அனைத்து உயிர்க்கும் காதல் உண்டு..


திருக்குற்றாலக் குறவஞ்சி..

போரில் புறநானூற்றுத் தாய்...


போர்க்கலைகள் ..(இந்த ஊர்தி ஊர்வலம் வரும் பொழுது கலைஞர்கள் போர்கலைகளை செய்த வண்ணம் வந்தார்களாம் )
பொன்னர் , சங்கர்.. ( இதற்காக முதல்வருக்கு தனிப்பட முறையில் நன்றி ஏன் எனில் இந்தக்கதை எங்கள் ஊரில் நடந்தது ..)


சாதி, இன , வேறுபாடு அற்றல்....

சங்கே முழங்கு -பாரதிதாசன்..

வீரத்திலகம் வேலு நாச்சியார் ..தமிழகக் கலை வளர்ச்சி...
--------------------------------------------------------
அடுத்த பதிவில் இன்னும் பத்து இனிக்கும்

அன்புடன்

பொன்.சிவா

Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -2)

செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதாவைப்பற்றி ஆங்கிலத்தில் வசை(கவி)பாடிய பெண் கவிஞர்..





நண்பனின் திருமண ஒப்பந்தத்திற்கு சென்றதால் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் ஆரம்ப நிகழ்ச்சிகளை காண இயலவில்லை.. 'இனியவை நாற்பது' எனும் ஊர்வலத்தையவது கண்டு விடலாம் என்று வந்தால் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் வரவே மாலை ஏழு மணிக்கு மேலே ஆகிவிட்டது....
சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே நான் கண்ட காட்சி...
பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள டாஸ்மாகில் 'பார்' இல்லாத காரணத்தால் வெளியூரிலிருந்து வந்திருந்த உடன்பிறப்புக்கள் பலர் தங்களின் தமிழ்ப்பற்றையும் தமிழ் உணர்வையும் குடித்து கும்மாளமிட்டு வெளிப்படிதுக்கொண்டிருன்தனர் .. இரு காவல்க்கரர்கள் அவர்களின் அருகிலேயே நின்று கொண்டு கடமையை கண்ணும் கருத்துமாய் பார்த்ததுதான் கொடுமையின் உச்சம் ..
என் அருகே நடந்து வந்த இரு பெண்மணிகள் அந்தக்கட்சியை பார்த்துவிட்டு ' இதுகெல்லாம் இதுக்குனே அங்கிருந்து வரும் போல ' என்று முனகிக்கொண்டனர்..
ஊர்வலம் நடைபெறுவதால் அங்கிருந்து பேருந்து இல்லை ..என் அறைக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தோம்..

மாநாட்டையும் ஊர்வலத்தையும் பார்த்த மக்கள் எங்களின் எதிர் திசையில் பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.. அவர்களில் பெரும்பாலனோர் கோயம்புத்தூரில் தமிழ் 'குடிக்க' வந்த'கரைவேட்டிகள் தான்...

அன்று நான் கண்ட பெரும்பாலான வாகனம்களில் கருப்பு சிகப்பு கொடிதான் கட்டியிருந்தது.. அனல் ஒரு வாகனத்தில் கூட செம்மொழி மாநாட்டின் இலச்சினையாம் வள்ளுவன் படம் பொறித்த கொடி இல்லை.

மக்கள் கூட்டம் அதிகமாகவே வந்திருப்பதை உணர்ந்தேன்..வந்திருந்த உடன் பிறப்புகள் 'கலைஞர் ,ஸ்டாலின் ,எல்லோரையும் வாழ்கவென' கத்திக்கொண்டே சென்றாலும் .. பெண்கள் ஊர்வலத்தில் தாங்கள் ரசித்த வண்டிகளைப்பற்றி பேசிக்கொண்டு சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது..

நங்கள் செல்வதற்குள் ஊர்வலம் முடிந்து விட்டதால் .. நாளை மாநாட்டிற்கு செல்லலாம் என்றவாறே அறைக்கு வந்தோம்...

இரண்டாம் நாளன நேற்று காலை 'லாரன்சின் மாற்றுத்திறனாளிகளின்' நடன நிகழ்ச்சி காணலாம் என்ற ஆவல் இருந்தது ..வேலை நிமித்தமாய் இருந்ததால் செல்ல முடியவில்லை....
மதியம் ஒரு மணிக்கு தான் சென்றோம்..செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டமும்,வாகன நெரிசலும் .. இன்றும் அனேக வண்டிகள் கருப்பு சிகப்புக்கொடியுடன் தான் வளம் வந்துகொண்டிருந்தன..

மாநாட்டின் நுழைவாயிலில் நுழைந்ததும் 'சங்கர் படம் ' போல் ஒரு பிரமாண்டத்தை உணர முடிந்தது..

நுழைவாயிலின் இடது புறம் 'செம்மொழியான தமிழ் மொழியே' எனும் வாசகம் கம்பீரமாய் காட்சியளிதுக்கொண்டிருந்தது.. மக்கள் அதனை பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர்..அதனைதொடர்ந்து உணவகங்கள் ... எல்லா உணவங்களுக்குளும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது.. மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.. வெளியூரில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது..




அதைதொடர்ந்து வலப்புறம் மாநாடுப்பந்தளுக்குள் நுழைந்தோம் .. 'கவிகோ'அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது..
நாங்கள் செல்கையில் வ.மு.சேதுராமன் கவிதை வாசித்தார் என்று சொல்வதை விட கலைஞரின் துதி பாடினார் என்று சொல்வதே சாலச்சிறந்தது,
என் கூட வந்த சரவணன் கொஞ்சம் கோபக்காரன் வேற ..அவன் கேட்டான் 'கலங்கற பாராட்டடும் வேண்டாம்னு சொல்லல அதற்காக எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டுவிட்டு அவரையே புகழ்ந்திட்டுர்ந்த என்ன அர்த்தம் - அட வா போலாம் மச்சான் ' என்றான் கோபமாக.. இருடா அடுத்த ஆளைப்போர்ப்போம் என்று அவனை இருக்க வைத்தேன் ..

அடுத்து வந்த பெண் கவிஞர் ..முதலில் கவியரங்க தலைவர் 'கவிகோ'வை தான் புகழ்ச்சியால் குளிக்க வைத்து விட்டு பின் தன் கழகத் தலைவரை ..
'மூத்த மகனோ உரம்..
இளைய மகனோ வரம்...
பேரன் பேத்திகள் விழுதாக..
நீ ஒரு ஆழ மரம் ..'

துதி பாட ஆரம்பித்தார் .. பின்

'நிலவை சுற்றித்தான் நட்சத்திரம் இருக்கும்
ஆனால் இங்கோ சூரியன் உன்னை சுற்றித்தான்
நட்சத்திரங்கள் நாங்கள் இருகின்றோம் ' என்று திரையுலகம் தலைவரைப்போற்றுவதை சொன்னார்..

சரவணன் கடுப்பாகி வா மச்சான் போலாம் என்றான் ..
இருடா என்றேன்..

அதன் பின் அந்தப் பெண் கவிஞர் வாசித்தார் பாருங்கள்..

நீ அடிக்கடி போகிறாய் ஸ்டேட்....
இப்படி சென்றால் என்னாவது என் ஸ்டேட் ..

என்றாரே பார்க்கலாம் கூச்சத்தில் நான் நெளிவதை தவிர என்னால் என்ன செய்துவிட முடியும் ..

தி மு க காரணயிருந்தால் கை தட்டியிருப்பேன் . அ தி மு க காரணயிருந்தால் கல்லெடுத்து எறிந்திருப்பேன் ..
என்ன செய்ய தமிழனாய் பிறந்ததால் கவி பாடிய அந்தப்பெண்ணை மனதிற்குள் கெட்ட வார்த்தையால் திட்டியாவரே வெளியே வந்து விட்டேன் ..

பின்ன என்னங்க நீங்களே சொல்லுங்க ..

கலைஞர் ஆட்சில செம்மொழி மாநாடு நடக்குது அவரை புகழட்டும் , ஒரு வேலை அந்த அம்மாவை கூட இப்படித்தான் தஞ்சாவூரில் புகழ்ந்திருக்கலாம் ..
இங்கே அந்த அம்மாவை குறை கூறும் அரசியல் எதற்கு.. ஒரு வேலை சென்ற உலகத் தமிழ் மாநாட்டில் உங்கள் தலைவரை இப்படி எள்ளி நகையடினர்களோ..?
இல்லை உங்கள் தலைமை இப்படி கவி பாட சொல்லியதோ ..? அப்படியே சொல்லி இருந்தாலும் ஆங்கில வார்த்தையில் ஏன் செம்மொழி மாநாட்டில் கவிதை ..?

இதே கருத்தை

நீ அடிக்கடி போகிறாய் கொடைநாடு..
இப்படி நீ சென்றால் என்னாவது என் நாடு ..

என்று எழுதியிருக்கலாம் அல்லவா ..!

அந்த பெண் கவிஞரின் பெயர் ஆண்டாள் பிரியதர்சினி யோ ..! இல்லை கல்ப்பாக்கம் ரேவதியோ .. இந்தக் கோபத்தில் மறந்துவிட்டேன்..

கடுப்பாகி வெளியில் வந்தோம் ....
இணைய தள கண்காட்சி அரங்கில் கூட்டமாய் இருந்ததால் நாளை வரலாம் என்று மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்தோம் .. எதிர் புறம் உள்ள மைதானத்தில் இனியவை நாற்பதில் ஊர்வலம் வந்த அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்... அதைப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்......

வரும் வழியில் சரவணன் ' .. 'எப்படியோ ' தமிழ் செம்மொழியானது எதற்கு பயன்படுதோ இல்லையோ ..இன்னும் மூன்று நாட்கள் கலைஞரை பாரட்ட பயன் படும்..'' என்று சொல்லியவரே ...
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' பாடத் தொடங்கினான்....


பின் குறிப்பு - செம்மொழி மாநாட்டில் என்னைக்கவர்ந்த இனியவை நாற்பது எனும் அலங்கார ஊர்திகளை படத்துடன் அடுத்த பதிவில் இடுகிறேன்.....


















Wednesday, June 23, 2010

கவிதைன்னு நீங்க சொன்னா கவிதை தான்....பாகம்-௨

மீண்டும் ஒரு காதல் செய்வோம்

கண்டவுடன் காதல்
கண்ணியமில்லை என்று
கருதி வந்தேன் - உன்னைக்
கண்டவுடன் கண்ணியமாய் இருப்பது
கண்ணியமில்லை எனக் கருதுகிறேன் ..

ஓஓஓஒ....என்று கூட்டத்தின் இரைச்சல்
தனியாய் நான் நடக்கையிலே...
ம்ம்...... என்ற சலனமற்றல் ....
கூட்டத்தில் நான் இருக்கையிலே..!

ஒரு பனிக்கட்டியை
உள்ளங்கையில் வைத்திருக்கும்
உணர்வு எனக்கு-
உன் பக்கத்தில் நான் இருக்கையிலே ..
உள்ளங்கையில் வைத்திருக்கும் பனிக்கட்டி
கொஞ்சம் கொஞ்சமாய் கரைவதைப்போல் உணர்வு ..
உன்னை விட்டு பிரிந்து வந்த பயண நேரத்திலே ...

என்னிடம் தோற்று ஓடும்
என் எதிரியின் கண்ணில் கூட
இனி நீ பட்டு விடாதே - இந்த
அழகுசித்திரவதை என் எதிரிக்கும் வேண்டாம்....


விசாரித்தேன் உன்னை ...
யாரயோ காதலிக்கின்றாயாமே...?
நானும்தான்.....!

'முதல் காதல் தோல்வியில்தான் முடியும் '
என்ற காதல் இலக்கணத்தை நாம் எதற்கு மீற வேண்டும்...?
வா......நம் முதல் காதல்களை முறித்துவிட்டு ....
மீண்டும் ஒரு காதல் செய்வோம்..

ஒரு திருமணம்
இரு காதல் முறிவு
ஒரு காதல் ஆரம்பம் --

எனக் கவிதை படுவோம்...