தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Sunday, June 20, 2010
செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௧)
'மைக் டெஸ்டிங் ' என ஆரம்பித்த செம்மொழிக் கலைவிழா ...
இனிதே ஆரம்பம் ஆகிவிட்டது ...
நடைபெறப்போகும் செம்மொழி மாநாட்டிற்கு முன் விழாவாக கோவை நகரெங்கும் பதினொரு இடங்களில் செம்மொழிக் கலைவிழா நேற்று முதல் நாளை வரை நடை பெறுகின்றது..
எனது அறையின் அருகிலே இருக்கும் 'தியாகி என்.ஜி.ராமசாமி ' பள்ளி திடலிலும் நடை பெறுவதால் நேற்று மாலை இந்த கலைவிழாவை 'சிறப்பிக்க" நானும் சரவணனும் சென்றிருந்தோம் ...
முதலில் மூன்று பெண்கள் (அந்தப்பள்ளியின் ஆசிரியைகளாய் இருக்க வேண்டும்) மேடை ஏறி 'மைக் டெஸ்டிங் ' என ஆரம்பித்தார்கள் பின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்கள்..
பின் மூன்றில் வெள்ளை சேலை அணிந்த ஆசிரியை தொகுத்தளிக்க ஆரம்பம் ஆனது கலைவிழா..
முதலில் மேடை ஏறிய பெரிய மேளக்காரர்கள் அவ்வளவாக சோபிக்க வில்லை..
அடுத்ததாய் 'திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம்' என அறிவித்தார்கள்.. நான் சற்றே முன்னேறி மேடை அருகில் சென்றேன் ஏனெனில் இவர்களின் நிகழ்ச்சியை ஏற்கனவே எங்கள் ஊர் திருவிழாவில் ஒரு முறை பார்த்திருக்கிறேன்...
பறையாட்டம் என்றால் பறையடிதுக்கொண்டே ஆடுவதுதான் .. ஆனால் இந்த சக்தி குழுவினரின் சிறப்பு என்னவெனில் இளம் பெண்கள் பறையடித்துக்கொண்டே ஆடுவதுதான் ... ஆட்டம் என்றால் சாதரணமாக இருக்காது .. பம்பரம் போல் சுற்றிக்கொண்டும் , பாம்பு போல் வளைந்துகொண்டும் .. வட்டமிட்டுக்கொண்டும், இரு குழுவாய் பிரிந்து கொண்டும் துள்ளிக்குதித்து ஆடும் பொழுது நிச்சயம் நீங்கள் சற்று நேரம் மெய் மறந்து போவிர்கள் .. அதிலும் அந்த முன்னால் ஆடும் பெண் அடுத்த அடுத்த படிக்கு சொல்லும்போதும் 'ஊ.. ஒ.... ' எனக்கத்துவதே அதனை அழகாயிருக்கும்..
ஆட்டம் முடிந்த பின் நிச்சயம் நீங்கள் உங்களை அறியாமல் கை தட்டுவிர்கள்..
தொடர்ந்து பதினைந்து நிமிடம் ஆடும் இவர்கள் நேற்று பத்து நிமிடம் தான் ஆடினார்கள் ..அடுத்த இடத்திற்கு அழைத்து செல்ல அரசுப்பேருந்து காத்திருந்தது..
இவர்களின் ஆட்டத்தின் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன் .. கைபேசியில் எடுத்ததால் நீண்ட நேரம் எடுக்க இயலவில்லை ..
http://www.youtube.com/watch?v=xUXsGtkamss
http://www.youtube.com/watch?v=5STvo_rs1b8
இதன் பின் கிராமியப்பாடல் குழு மேடையேறியது .. அந்தக்குழுவின் தலைவர்- பாடகரை நான் ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் கலை நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.. நீங்களும் இவரது பாடல்களை கேட்டிருக்கலாம் ..
விடுதியில் தங்கியுள்ள ஒரு ஏழை சிறுமி தான் தாய்க்கு கடிதம் மூலம் துன்பங்களை பகிர்ந்து கொள்வது போல் அமைந்திருக்கும் 'அன்புள்ள அம்மாவிற்கு மகள் எழுதும் கடிதம் ..' பின் 'தமிழா நீ பேசுவது தமிழா ..?' என்று நிறைய பாடியிருக்கிறார்.. நேற்று தமிழா நீ பேசுவது தமிழா தான் பாடினார்..
அம்மாவை மம்மி என்கிறாய்..? என்று ஆரம்பித்து தமிழில் ஆங்கிலம் கலப்பதை சுட்டிகாட்டி கடைசியில் வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? என்று கோபமாய் முடித்தார்..
அந்நேரம் பார்த்து என் அருகில் இருந்த சிறுமி ' மம்மி ஐஸ் கிரீம் வேணும்' என்றது தன் தாயிடம் ....
யாரோ ஒருவர் '' அங்கிள் பங்ஷன் ஆரம்பிச்சாச்சு' என்றார் தொலைபேசியில் ..
அடுத்து அந்த வெள்ளை சேலை தொகுத்து வழங்கிய ஆசிரியை வந்து ஒலிபெருக்கி சரியாக இல்லை போலும் ...மீண்டும் ' மைக் டெஸ்டிங் '' என்று ஆரம்பித்து
'' அடுத்தபடியாக சிலப்பதிகாரம் , புறநானூறு, திருக்குறள் ,, நாவலடியார் போன்ற தமிழிசைப்பாடல் மற்றும் பாரதியார் பாடல்கள் '' என்றார் .. நாலடியார் தெரியும் அது யாருடா அது நாவலடியர் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே .. மன்னிக்கவும் நாலடியார் என்றார்..
தமிழிசைப் பாட வந்த புண்ணியவானோ மேற்சொன்ன எல்லாப்பாடல்களையும் வெற்றிலையாக்கி ... ராகமோ என்னமோ அதை சுண்ணாம்பாக்கி மென்று துப்பிக்கொண்டிருந்தார் ...
நான்கைந்து உணவு விடுதிகள் இருந்தன .. ஒரு பொருட்க்காட்சியைவிட
மக்கள் கூட்டம் நிறையவே வந்திருந்தார்கள் .... குடும்பத்துடன் வந்திருந்தார்கள்..
நிறைய இளம் பெண்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக வந்திருந்தார்கள் .. வந்திருந்த மக்களில் நிறைய பேர் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள் ..
நானும் உற்று உற்று நோக்கினேன்.. ஒரு யுவதியும் தலையில் பூ சூடவில்லை என்பது எனக்கு நேற்றைய கவலை......
அந்தக்கவலை தங்க முடியாமல் வாடா போலமென்று சரவணனை அழைத்துக்கொண்டு என் குலசாமி கோயிலுக்கு( அட அதாங்க டாஸ்மாக் ) சென்றேன்..
செல்லும் வழியில் சரவணனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்...
சரவணன்; இந்த மாநாடு எதுக்காக மச்சான் நடத்துறாங்க..?
நான்: 'உலகதமிழ் அறிஞர்கள் வருவாங்க எல்லாரும் தமிழ் மொழியின் அருமை பெருமைகளையும் .. மொழியின் வருங்கால வளர்ச்சி பற்றியும் பேசுவார்கள்..'
சர: இதற்க்கு முன்னால் எதனை மாநாடு நடந்திருக்கு ..?
நான்; எட்டு ..
சர; அப்போ இத ஏன் ஒன்பதாவது உலகதமிழ் மாநாடுன்னு அறிவிக்கவில்லை..!
நான்; தமிழுக்குத்தான் செம்மொழி அங்கீகாரம் கிடைத்துவிட்டதே .. அதான் செம்மொழி மாநாடு ..
சர ; சரி அப்போ ஒன்பதாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடுன்னு அறிவிக்க வேண்டியது தானே.. எதுக்கு செம்மொழி மாநாடுன்னு மட்டும் விளம்பரப்படுத்துறாங்க.. இதுல ஜூன் மாசத்த தமிழில் சொல்றேன்னு சூன் நுனு வேற எழுதுறாங்க.. ஜூன் என்று எழுத சங்கடமிருந்தால் தமிழ் மாதப்பெயரை எழுத வேண்டியதுதானே .. தமிழை மட்டும் கொல்லாமல் ஆங்கிலத்தையும் சேர்த்து கொல்றாங்க .. அட போ மச்சான் நீ வேற இந்த ஆளு சாவறத்துக்குள்ள இது மாதிரி ஒரு மாநாடு நடதிரனமுனு ஆசை அதான் இவருக்கு தெரிஞ்ச ஆளுகளா கூட்டியாந்து மனுஷன் நடத்துறார்.. அவ்ளோதான் ..
இதை முதல் செம்மொழி மாநாடுன்னு வச்சுக்கிட்டாலும் அடுத்து வரும் மாநாடுகள் இரண்டம் செம்மொழி மாநாடு என்று அழைக்கப்படுமா.? இல்லை பத்தாம் உலகதமிழ் செம்மொழி மாநாடு என்று அழைக்கவேண்டுமா ? எது எப்டியோ கோயம்பத்தூருல குண்டும் குழியுமா கிடந்த சாலைகள் சரி பண்ணிருக்காங்க அது வரைக்கும் மகிழ்ச்சி..!
நான்- சரி விடுடா.. நமக்கெதுக்கு அதெல்லாம் .. என்னோமோ தமிழ் பேரைச்சொல்லி நடத்துறாங்க .. நம்மளும் தமிழன் என்கிற உணர்வோட போய் கலந்துக்குவோம் .. வெளியூரில் இருந்து வரும் நண்பர்களையும் வரவேற்ப்போம்..
சர; அட ஏன் மச்சான் நீ வேற யாரு வரப்போற...? அஞ்சு நாலும் கோயம்பத்தூருக்குள்ள கருப்பு சிகப்பு கரை வேட்டிகளத்தான் திரியப்போகுதுக..
நம்ம ஊர்ல இப்பவே காசு கொடுத்தாச்சு தெரியுமா ? ஒரு நாளைக்கு ஆம்பளைக்கு ஐநூறு ,பொம்பளைக்கு முந்நூறு ..
நான் ; அது என்னடா ஆம்பளைக்கு மட்டும் ஐநூறு ?
சர; ம்ம்ம் வர்றவன் சரக்கு அடிக்க வேணாமா அதுக்குத்தான் ஆம்பளைக்கு அதிகம் ..
நான்; என்னமோ பண்ணிட்டு போறாங்க கடை வந்துருச்சு நம்ம போய் அடிக்கலாம்..
கடைக்குள் நுழைந்தோம்..
பின் குறிப்பு ..
௧. சக்தி கலைக்குழுவின் பறையாட்டம் இன்று மாலை ஆறு மணிக்கு காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறுகிறது .. விருப்பம் உள்ள உள்ளூர் வாசிகள் சென்று காணலாம்..
௨. வெளியூரில் இருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு இடம் இல்லை எனில் ஏன் அறையில் தங்கிக்கொள்ளலாம் ... என் அறைக்கும் அருகாமையில்தான் மாநாடு நடைபெறுகின்றது..
அன்புடன்..
பொன்.சிவா.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
கலக்கறீங்க.BOSS...
நல்ல சரளமான கட்டுரை.
மனோ
nice. veettula poi comment poduren
அன்பின் சிவா,
வரும் வெள்ளியன்று கோவை வருகிறேன் செம்மொழி மாநாடில் கலந்து கொள்ள.
உங்கள் அறையில் தங்க உங்கள் அனுமதி தேவை.ஞாயிறு இரவு புறப்பட்டுவிடுவேன்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
லக்கிலுக் காதுல விழுந்துடப்போகுது. சாக்கிரதை. (ஜாக்கிரதையில் வரும் ஜா தமிழ் இல்லை. அதான் 'சா' போட்டேன்)
அந்த திருவள்ளுவர் எம்பளம் என்ன சொல்லுதாம்? சுனாமியே வந்தாக்கூட மூன்று நாமம் போடுவோம் என்று திருவள்ளுவர் சொல்றாரா?
வீடியோ அருமை. தகவல்களுக்கு மிக்க நன்றி. மற்றும் இன்னும் நடக்கபோற கூத்துக்களை ஷேர் பண்ணிகொங்க பாஸ்
தோழா
சனிக்கிழமை இரவு எனக்கு தங்க இடம் கிடைக்குமா?
oru nayagan udayamagiran . vaalthukal
Nanba Unmayileye oru Naalla Katurai Eludura ella thagutiyum unakku Iruukku Superrrrr...... Congrats....... Tharamma Irrukku......... Good ........... Keep it up.............
நன்றி நண்பா
தயுவு செய்து உன் பின்னுட்டத்தை தமிழில் இடவும்.. உன் மெயில் பாக்ஸ் இல் கம்போஸ் சென்று தமிழில் டைப் செய்து வெட்டி பின்னூட்டப் பெட்டியில் ஒட்டவும்..அண்ணன் பாலமுருகனுக்கும் அதே வேண்டுகோள் ..
அன்புடன்
பொன்.சிவா
தண்ணியடிக்கறவன் பேச்செல்லாம் ஒரு பேச்சா பாஸ்?
இதுக்கு 'செம்மொழி மாநாடும் நானும்'-னு ஒரு தலைப்பு வேற?
இதப் படிச்சதுக்கு,நாக்கப் புடிங்கிகிட்டு சாகலாம்!
தங்களின் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி...அனானி அவர்களே.....
அன்புடன்
பொன்.சிவா
தெளிவான பதிவு சிவா.நீங்க பகுதி 1 என்பதற்குப் பதிலாக க என்று போட்டிருப்பதிலேயே உங்கள் தமிழ்ப் பற்றுத் தெரிகிறது.தமிழுக்கு நிறையவே பெருமை கிடைத்திருக்கிறது.தமிழனுக்கு !
Post a Comment