Friday, June 25, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௩ )

இனியவை நாற்பதில் இரண்டாம் பத்து..

போரில் மகளிர்..( இந்த ஊர்தி ஊர்வலம் வரும்பொழுது பெண்கள் போர் புரிவதுபோல் நடித்துக்காட்டி வந்தார்களாம் )
நிற வேறுபாடால் மனிதன் வேறுபடுவதில்லை ..
பகிர்ந்து உண் ..














மணி மேகலை..

கண்ணகி ..

மனுநீதிச் சோழன் ...


நட்பிலக்கணம். கோப்பெருஞ்சோழன் , பிசிராந்தையார்..


மயிலுக்கு போர்வை தந்த பேகன் ..

குமணப்புலவரின் காலில் விழுந்து வணங்கும் மன்னன்..


பொற்கை பாண்டியன்...

...................................................................................................................................................................

அடுத்த பதிவில் அடுத்த பத்து இனிக்கும் .....

அன்புடன்
பொன்.சிவா

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௩ )

இனியவை நாற்பதில் பத்து..

நடந்து கொண்டிருக்கும் செம்மொழி மாநாட்டில் என்னை மட்டும் இல்லாமல் வரும் அனைவரையும் கவர்ந்தது 'இனியவை நாற்பது ' எனும் தலைப்பில் நடந்த அலங்கார ஊர்திகள் தான் ..! இந்த ஊர்திகள் மாநாட்டு திடலின் எதிரே உள்ள 'சி ஐ டி' கல்லுரி வளாகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ... மாநாடு முடிந்த பின்னும் ஒரு வாரம் மக்கள் பார்வைக்கு இவைகள் இருக்கும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார்... இதைக் காண முடியாதவர்களுக்கு என்னால் இயன்றது இந்த படப்பதிவு.. பத்து பத்தாக பதிவிட முடிவெடுத்துள்ளேன் ....


தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் வருட சிறப்பை உணர்த்தும் விதமாக...



அனைத்து உயிர்க்கும் காதல் உண்டு..


திருக்குற்றாலக் குறவஞ்சி..

போரில் புறநானூற்றுத் தாய்...


போர்க்கலைகள் ..(இந்த ஊர்தி ஊர்வலம் வரும் பொழுது கலைஞர்கள் போர்கலைகளை செய்த வண்ணம் வந்தார்களாம் )
பொன்னர் , சங்கர்.. ( இதற்காக முதல்வருக்கு தனிப்பட முறையில் நன்றி ஏன் எனில் இந்தக்கதை எங்கள் ஊரில் நடந்தது ..)


சாதி, இன , வேறுபாடு அற்றல்....

சங்கே முழங்கு -பாரதிதாசன்..

வீரத்திலகம் வேலு நாச்சியார் ..தமிழகக் கலை வளர்ச்சி...
--------------------------------------------------------
அடுத்த பதிவில் இன்னும் பத்து இனிக்கும்

அன்புடன்

பொன்.சிவா

Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -2)

செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதாவைப்பற்றி ஆங்கிலத்தில் வசை(கவி)பாடிய பெண் கவிஞர்..





நண்பனின் திருமண ஒப்பந்தத்திற்கு சென்றதால் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் ஆரம்ப நிகழ்ச்சிகளை காண இயலவில்லை.. 'இனியவை நாற்பது' எனும் ஊர்வலத்தையவது கண்டு விடலாம் என்று வந்தால் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் வரவே மாலை ஏழு மணிக்கு மேலே ஆகிவிட்டது....
சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே நான் கண்ட காட்சி...
பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள டாஸ்மாகில் 'பார்' இல்லாத காரணத்தால் வெளியூரிலிருந்து வந்திருந்த உடன்பிறப்புக்கள் பலர் தங்களின் தமிழ்ப்பற்றையும் தமிழ் உணர்வையும் குடித்து கும்மாளமிட்டு வெளிப்படிதுக்கொண்டிருன்தனர் .. இரு காவல்க்கரர்கள் அவர்களின் அருகிலேயே நின்று கொண்டு கடமையை கண்ணும் கருத்துமாய் பார்த்ததுதான் கொடுமையின் உச்சம் ..
என் அருகே நடந்து வந்த இரு பெண்மணிகள் அந்தக்கட்சியை பார்த்துவிட்டு ' இதுகெல்லாம் இதுக்குனே அங்கிருந்து வரும் போல ' என்று முனகிக்கொண்டனர்..
ஊர்வலம் நடைபெறுவதால் அங்கிருந்து பேருந்து இல்லை ..என் அறைக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தோம்..

மாநாட்டையும் ஊர்வலத்தையும் பார்த்த மக்கள் எங்களின் எதிர் திசையில் பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.. அவர்களில் பெரும்பாலனோர் கோயம்புத்தூரில் தமிழ் 'குடிக்க' வந்த'கரைவேட்டிகள் தான்...

அன்று நான் கண்ட பெரும்பாலான வாகனம்களில் கருப்பு சிகப்பு கொடிதான் கட்டியிருந்தது.. அனல் ஒரு வாகனத்தில் கூட செம்மொழி மாநாட்டின் இலச்சினையாம் வள்ளுவன் படம் பொறித்த கொடி இல்லை.

மக்கள் கூட்டம் அதிகமாகவே வந்திருப்பதை உணர்ந்தேன்..வந்திருந்த உடன் பிறப்புகள் 'கலைஞர் ,ஸ்டாலின் ,எல்லோரையும் வாழ்கவென' கத்திக்கொண்டே சென்றாலும் .. பெண்கள் ஊர்வலத்தில் தாங்கள் ரசித்த வண்டிகளைப்பற்றி பேசிக்கொண்டு சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது..

நங்கள் செல்வதற்குள் ஊர்வலம் முடிந்து விட்டதால் .. நாளை மாநாட்டிற்கு செல்லலாம் என்றவாறே அறைக்கு வந்தோம்...

இரண்டாம் நாளன நேற்று காலை 'லாரன்சின் மாற்றுத்திறனாளிகளின்' நடன நிகழ்ச்சி காணலாம் என்ற ஆவல் இருந்தது ..வேலை நிமித்தமாய் இருந்ததால் செல்ல முடியவில்லை....
மதியம் ஒரு மணிக்கு தான் சென்றோம்..செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டமும்,வாகன நெரிசலும் .. இன்றும் அனேக வண்டிகள் கருப்பு சிகப்புக்கொடியுடன் தான் வளம் வந்துகொண்டிருந்தன..

மாநாட்டின் நுழைவாயிலில் நுழைந்ததும் 'சங்கர் படம் ' போல் ஒரு பிரமாண்டத்தை உணர முடிந்தது..

நுழைவாயிலின் இடது புறம் 'செம்மொழியான தமிழ் மொழியே' எனும் வாசகம் கம்பீரமாய் காட்சியளிதுக்கொண்டிருந்தது.. மக்கள் அதனை பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர்..அதனைதொடர்ந்து உணவகங்கள் ... எல்லா உணவங்களுக்குளும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது.. மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.. வெளியூரில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது..




அதைதொடர்ந்து வலப்புறம் மாநாடுப்பந்தளுக்குள் நுழைந்தோம் .. 'கவிகோ'அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது..
நாங்கள் செல்கையில் வ.மு.சேதுராமன் கவிதை வாசித்தார் என்று சொல்வதை விட கலைஞரின் துதி பாடினார் என்று சொல்வதே சாலச்சிறந்தது,
என் கூட வந்த சரவணன் கொஞ்சம் கோபக்காரன் வேற ..அவன் கேட்டான் 'கலங்கற பாராட்டடும் வேண்டாம்னு சொல்லல அதற்காக எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டுவிட்டு அவரையே புகழ்ந்திட்டுர்ந்த என்ன அர்த்தம் - அட வா போலாம் மச்சான் ' என்றான் கோபமாக.. இருடா அடுத்த ஆளைப்போர்ப்போம் என்று அவனை இருக்க வைத்தேன் ..

அடுத்து வந்த பெண் கவிஞர் ..முதலில் கவியரங்க தலைவர் 'கவிகோ'வை தான் புகழ்ச்சியால் குளிக்க வைத்து விட்டு பின் தன் கழகத் தலைவரை ..
'மூத்த மகனோ உரம்..
இளைய மகனோ வரம்...
பேரன் பேத்திகள் விழுதாக..
நீ ஒரு ஆழ மரம் ..'

துதி பாட ஆரம்பித்தார் .. பின்

'நிலவை சுற்றித்தான் நட்சத்திரம் இருக்கும்
ஆனால் இங்கோ சூரியன் உன்னை சுற்றித்தான்
நட்சத்திரங்கள் நாங்கள் இருகின்றோம் ' என்று திரையுலகம் தலைவரைப்போற்றுவதை சொன்னார்..

சரவணன் கடுப்பாகி வா மச்சான் போலாம் என்றான் ..
இருடா என்றேன்..

அதன் பின் அந்தப் பெண் கவிஞர் வாசித்தார் பாருங்கள்..

நீ அடிக்கடி போகிறாய் ஸ்டேட்....
இப்படி சென்றால் என்னாவது என் ஸ்டேட் ..

என்றாரே பார்க்கலாம் கூச்சத்தில் நான் நெளிவதை தவிர என்னால் என்ன செய்துவிட முடியும் ..

தி மு க காரணயிருந்தால் கை தட்டியிருப்பேன் . அ தி மு க காரணயிருந்தால் கல்லெடுத்து எறிந்திருப்பேன் ..
என்ன செய்ய தமிழனாய் பிறந்ததால் கவி பாடிய அந்தப்பெண்ணை மனதிற்குள் கெட்ட வார்த்தையால் திட்டியாவரே வெளியே வந்து விட்டேன் ..

பின்ன என்னங்க நீங்களே சொல்லுங்க ..

கலைஞர் ஆட்சில செம்மொழி மாநாடு நடக்குது அவரை புகழட்டும் , ஒரு வேலை அந்த அம்மாவை கூட இப்படித்தான் தஞ்சாவூரில் புகழ்ந்திருக்கலாம் ..
இங்கே அந்த அம்மாவை குறை கூறும் அரசியல் எதற்கு.. ஒரு வேலை சென்ற உலகத் தமிழ் மாநாட்டில் உங்கள் தலைவரை இப்படி எள்ளி நகையடினர்களோ..?
இல்லை உங்கள் தலைமை இப்படி கவி பாட சொல்லியதோ ..? அப்படியே சொல்லி இருந்தாலும் ஆங்கில வார்த்தையில் ஏன் செம்மொழி மாநாட்டில் கவிதை ..?

இதே கருத்தை

நீ அடிக்கடி போகிறாய் கொடைநாடு..
இப்படி நீ சென்றால் என்னாவது என் நாடு ..

என்று எழுதியிருக்கலாம் அல்லவா ..!

அந்த பெண் கவிஞரின் பெயர் ஆண்டாள் பிரியதர்சினி யோ ..! இல்லை கல்ப்பாக்கம் ரேவதியோ .. இந்தக் கோபத்தில் மறந்துவிட்டேன்..

கடுப்பாகி வெளியில் வந்தோம் ....
இணைய தள கண்காட்சி அரங்கில் கூட்டமாய் இருந்ததால் நாளை வரலாம் என்று மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்தோம் .. எதிர் புறம் உள்ள மைதானத்தில் இனியவை நாற்பதில் ஊர்வலம் வந்த அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்... அதைப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்......

வரும் வழியில் சரவணன் ' .. 'எப்படியோ ' தமிழ் செம்மொழியானது எதற்கு பயன்படுதோ இல்லையோ ..இன்னும் மூன்று நாட்கள் கலைஞரை பாரட்ட பயன் படும்..'' என்று சொல்லியவரே ...
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' பாடத் தொடங்கினான்....


பின் குறிப்பு - செம்மொழி மாநாட்டில் என்னைக்கவர்ந்த இனியவை நாற்பது எனும் அலங்கார ஊர்திகளை படத்துடன் அடுத்த பதிவில் இடுகிறேன்.....


















Wednesday, June 23, 2010

கவிதைன்னு நீங்க சொன்னா கவிதை தான்....பாகம்-௨

மீண்டும் ஒரு காதல் செய்வோம்

கண்டவுடன் காதல்
கண்ணியமில்லை என்று
கருதி வந்தேன் - உன்னைக்
கண்டவுடன் கண்ணியமாய் இருப்பது
கண்ணியமில்லை எனக் கருதுகிறேன் ..

ஓஓஓஒ....என்று கூட்டத்தின் இரைச்சல்
தனியாய் நான் நடக்கையிலே...
ம்ம்...... என்ற சலனமற்றல் ....
கூட்டத்தில் நான் இருக்கையிலே..!

ஒரு பனிக்கட்டியை
உள்ளங்கையில் வைத்திருக்கும்
உணர்வு எனக்கு-
உன் பக்கத்தில் நான் இருக்கையிலே ..
உள்ளங்கையில் வைத்திருக்கும் பனிக்கட்டி
கொஞ்சம் கொஞ்சமாய் கரைவதைப்போல் உணர்வு ..
உன்னை விட்டு பிரிந்து வந்த பயண நேரத்திலே ...

என்னிடம் தோற்று ஓடும்
என் எதிரியின் கண்ணில் கூட
இனி நீ பட்டு விடாதே - இந்த
அழகுசித்திரவதை என் எதிரிக்கும் வேண்டாம்....


விசாரித்தேன் உன்னை ...
யாரயோ காதலிக்கின்றாயாமே...?
நானும்தான்.....!

'முதல் காதல் தோல்வியில்தான் முடியும் '
என்ற காதல் இலக்கணத்தை நாம் எதற்கு மீற வேண்டும்...?
வா......நம் முதல் காதல்களை முறித்துவிட்டு ....
மீண்டும் ஒரு காதல் செய்வோம்..

ஒரு திருமணம்
இரு காதல் முறிவு
ஒரு காதல் ஆரம்பம் --

எனக் கவிதை படுவோம்...

Sunday, June 20, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -௧)


'மைக் டெஸ்டிங் ' என ஆரம்பித்த செம்மொழிக் கலைவிழா ...


இனிதே ஆரம்பம் ஆகிவிட்டது ...

நடைபெறப்போகும் செம்மொழி மாநாட்டிற்கு முன் விழாவாக கோவை நகரெங்கும் பதினொரு இடங்களில் செம்மொழிக் கலைவிழா நேற்று முதல் நாளை வரை நடை பெறுகின்றது..

எனது அறையின் அருகிலே இருக்கும் 'தியாகி என்.ஜி.ராமசாமி ' பள்ளி திடலிலும் நடை பெறுவதால் நேற்று மாலை இந்த கலைவிழாவை 'சிறப்பிக்க" நானும் சரவணனும் சென்றிருந்தோம் ...

முதலில் மூன்று பெண்கள் (அந்தப்பள்ளியின் ஆசிரியைகளாய் இருக்க வேண்டும்) மேடை ஏறி 'மைக் டெஸ்டிங் ' என ஆரம்பித்தார்கள் பின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்கள்..
பின் மூன்றில் வெள்ளை சேலை அணிந்த ஆசிரியை தொகுத்தளிக்க ஆரம்பம் ஆனது கலைவிழா..

முதலில் மேடை ஏறிய பெரிய மேளக்காரர்கள் அவ்வளவாக சோபிக்க வில்லை..

அடுத்ததாய்
'திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம்' என அறிவித்தார்கள்.. நான் சற்றே முன்னேறி மேடை அருகில் சென்றேன் ஏனெனில் இவர்களின் நிகழ்ச்சியை ஏற்கனவே எங்கள் ஊர் திருவிழாவில் ஒரு முறை பார்த்திருக்கிறேன்...
பறையாட்டம் என்றால் பறையடிதுக்கொண்டே ஆடுவதுதான் .. ஆனால் இந்த சக்தி குழுவினரின் சிறப்பு என்னவெனில் இளம் பெண்கள் பறையடித்துக்கொண்டே ஆடுவதுதான் ... ஆட்டம் என்றால் சாதரணமாக இருக்காது .. பம்பரம் போல் சுற்றிக்கொண்டும் , பாம்பு போல் வளைந்துகொண்டும் .. வட்டமிட்டுக்கொண்டும், இரு குழுவாய் பிரிந்து கொண்டும் துள்ளிக்குதித்து ஆடும் பொழுது நிச்சயம் நீங்கள் சற்று நேரம் மெய் மறந்து போவிர்கள் .. அதிலும் அந்த முன்னால் ஆடும் பெண் அடுத்த அடுத்த படிக்கு சொல்லும்போதும் 'ஊ.. ஒ.... ' எனக்கத்துவதே அதனை அழகாயிருக்கும்..
ஆட்டம் முடிந்த பின் நிச்சயம் நீங்கள் உங்களை அறியாமல் கை தட்டுவிர்கள்..
தொடர்ந்து பதினைந்து நிமிடம் ஆடும் இவர்கள் நேற்று பத்து நிமிடம் தான் ஆடினார்கள் ..அடுத்த இடத்திற்கு அழைத்து செல்ல அரசுப்பேருந்து காத்திருந்தது..

இவர்களின் ஆட்டத்தின் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன் .. கைபேசியில் எடுத்ததால் நீண்ட நேரம் எடுக்க இயலவில்லை ..

http://www.youtube.com/watch?v=xUXsGtkamss

http://www.youtube.com/watch?v=5STvo_rs1b8



இதன் பின் கிராமியப்பாடல் குழு மேடையேறியது .. அந்தக்குழுவின் தலைவர்- பாடகரை நான் ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் கலை நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.. நீங்களும் இவரது பாடல்களை கேட்டிருக்கலாம் ..
விடுதியில் தங்கியுள்ள ஒரு ஏழை சிறுமி தான் தாய்க்கு கடிதம் மூலம் துன்பங்களை பகிர்ந்து கொள்வது போல் அமைந்திருக்கும் 'அன்புள்ள அம்மாவிற்கு மகள் எழுதும் கடிதம் ..' பின் 'தமிழா நீ பேசுவது தமிழா ..?' என்று நிறைய பாடியிருக்கிறார்.. நேற்று தமிழா நீ பேசுவது தமிழா தான் பாடினார்..

அம்மாவை மம்மி என்கிறாய்..? என்று ஆரம்பித்து தமிழில் ஆங்கிலம் கலப்பதை சுட்டிகாட்டி கடைசியில் வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? என்று கோபமாய் முடித்தார்..

அந்நேரம் பார்த்து என் அருகில் இருந்த சிறுமி ' மம்மி ஐஸ் கிரீம் வேணும்' என்றது தன் தாயிடம் ....
யாரோ
ஒருவர் '' அங்கிள் பங்ஷன் ஆரம்பிச்சாச்சு' என்றார் தொலைபேசியில் ..

அடுத்து அந்த வெள்ளை சேலை தொகுத்து வழங்கிய ஆசிரியை வந்து ஒலிபெருக்கி சரியாக இல்லை போலும் ...மீண்டும் ' மைக் டெஸ்டிங் '' என்று ஆரம்பித்து
'' அடுத்தபடியாக சிலப்பதிகாரம் , புறநானூறு, திருக்குறள் ,, நாவலடியார் போன்ற தமிழிசைப்பாடல் மற்றும் பாரதியார் பாடல்கள் '' என்றார் .. நாலடியார் தெரியும் அது யாருடா அது நாவலடியர் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே .. மன்னிக்கவும் நாலடியார் என்றார்..

தமிழிசைப் பாட வந்த புண்ணியவானோ மேற்சொன்ன எல்லாப்பாடல்களையும் வெற்றிலையாக்கி ... ராகமோ என்னமோ அதை சுண்ணாம்பாக்கி மென்று துப்பிக்கொண்டிருந்தார் ...

நான்கைந்து உணவு விடுதிகள் இருந்தன .. ஒரு பொருட்க்காட்சியைவிட
மக்கள் கூட்டம் நிறையவே வந்திருந்தார்கள் .... குடும்பத்துடன் வந்திருந்தார்கள்..
நிறைய இளம் பெண்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக வந்திருந்தார்கள் .. வந்திருந்த மக்களில் நிறைய பேர் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

நானும் உற்று உற்று நோக்கினேன்.. ஒரு யுவதியும் தலையில் பூ சூடவில்லை என்பது எனக்கு நேற்றைய கவலை......

அந்தக்கவலை தங்க முடியாமல் வாடா போலமென்று சரவணனை அழைத்துக்கொண்டு என் குலசாமி கோயிலுக்கு( அட அதாங்க டாஸ்மாக் ) சென்றேன்..

செல்லும் வழியில் சரவணனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்...

சரவணன்; இந்த மாநாடு எதுக்காக மச்சான் நடத்துறாங்க..?

நான்: 'உலகதமிழ் அறிஞர்கள் வருவாங்க எல்லாரும் தமிழ் மொழியின் அருமை பெருமைகளையும் .. மொழியின் வருங்கால வளர்ச்சி பற்றியும் பேசுவார்கள்..'

சர: இதற்க்கு முன்னால் எதனை மாநாடு நடந்திருக்கு ..?

நான்; எட்டு ..

சர; அப்போ இத ஏன் ஒன்பதாவது உலகதமிழ் மாநாடுன்னு அறிவிக்கவில்லை..!

நான்; தமிழுக்குத்தான் செம்மொழி அங்கீகாரம் கிடைத்துவிட்டதே .. அதான் செம்மொழி மாநாடு ..

சர ; சரி அப்போ ஒன்பதாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடுன்னு அறிவிக்க வேண்டியது தானே.. எதுக்கு செம்மொழி மாநாடுன்னு மட்டும் விளம்பரப்படுத்துறாங்க.. இதுல ஜூன் மாசத்த தமிழில் சொல்றேன்னு சூன் நுனு வேற எழுதுறாங்க.. ஜூன் என்று எழுத சங்கடமிருந்தால் தமிழ் மாதப்பெயரை எழுத வேண்டியதுதானே .. தமிழை மட்டும் கொல்லாமல் ஆங்கிலத்தையும் சேர்த்து கொல்றாங்க .. அட போ மச்சான் நீ வேற இந்த ஆளு சாவறத்துக்குள்ள இது மாதிரி ஒரு மாநாடு நடதிரனமுனு ஆசை அதான் இவருக்கு தெரிஞ்ச ஆளுகளா கூட்டியாந்து மனுஷன் நடத்துறார்.. அவ்ளோதான் ..
இதை
முதல் செம்மொழி மாநாடுன்னு வச்சுக்கிட்டாலும் அடுத்து வரும் மாநாடுகள் இரண்டம் செம்மொழி மாநாடு என்று அழைக்கப்படுமா.? இல்லை பத்தாம் உலகதமிழ் செம்மொழி மாநாடு என்று அழைக்கவேண்டுமா ? எது எப்டியோ கோயம்பத்தூருல குண்டும் குழியுமா கிடந்த சாலைகள் சரி பண்ணிருக்காங்க அது வரைக்கும் மகிழ்ச்சி..!

நான்- சரி விடுடா.. நமக்கெதுக்கு அதெல்லாம் .. என்னோமோ தமிழ் பேரைச்சொல்லி நடத்துறாங்க .. நம்மளும் தமிழன் என்கிற உணர்வோட போய் கலந்துக்குவோம் .. வெளியூரில் இருந்து வரும் நண்பர்களையும் வரவேற்ப்போம்..

சர; அட ஏன் மச்சான் நீ வேற யாரு வரப்போற...? அஞ்சு நாலும் கோயம்பத்தூருக்குள்ள கருப்பு சிகப்பு கரை வேட்டிகளத்தான் திரியப்போகுதுக..
நம்ம ஊர்ல இப்பவே காசு கொடுத்தாச்சு தெரியுமா ? ஒரு நாளைக்கு ஆம்பளைக்கு ஐநூறு ,பொம்பளைக்கு முந்நூறு ..

நான் ; அது என்னடா ஆம்பளைக்கு மட்டும் ஐநூறு ?

சர; ம்ம்ம் வர்றவன் சரக்கு அடிக்க வேணாமா அதுக்குத்தான் ஆம்பளைக்கு அதிகம் ..

நான்; என்னமோ பண்ணிட்டு போறாங்க கடை வந்துருச்சு நம்ம போய் அடிக்கலாம்..
கடைக்குள் நுழைந்தோம்..

பின் குறிப்பு ..

. சக்தி கலைக்குழுவின் பறையாட்டம் இன்று மாலை ஆறு மணிக்கு காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறுகிறது .. விருப்பம் உள்ள உள்ளூர் வாசிகள் சென்று காணலாம்..

. வெளியூரில் இருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு இடம் இல்லை எனில் ஏன் அறையில் தங்கிக்கொள்ளலாம் ... என் அறைக்கும் அருகாமையில்தான் மாநாடு நடைபெறுகின்றது..

அன்புடன்..

பொன்.சிவா.


























Friday, June 18, 2010

இராவணன் விமர்சனம்..


கதை, திரைகதை - வால்மீகி மற்றும் கம்பன்
வசனம் -சுகாசினி
இசை -ரகுமான்
ஒளிப்பதிவு -சந்தோஸ் சிவன் , மணிகண்டன்.
நடிப்பு
இராவணன்- விக்ரம் ,
ராமன்-பிரிதிவிராஜ்,
சீதை-ஐஸ்வர்யா ராய்,
அனுமன்- கார்த்திக் ,
கும்பகர்ணன் என்று வைத்துக்கொண்டால் - பிரபு.
சூர்பனகை-ப்ரியாமணி..

இயக்கம்-- மணி ரத்னம்

வழக்கமாய் மணி ரத்னம் தனது படங்களுக்கு கதைக்கு மெனக்கெட மாட்டார்..
திரைக்கதைக்கும் அதை காட்சிப்படுத்தளுக்குமே அதிகம் மெனக்கெட்டிருப்பார்.. ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த படத்தில் திரைக்கதையை கம்பனிடம் ஒப்படைத்துவிட்டு காட்சிப்படுதுதலில் மட்டும் கவனத்தை செலுத்தி அதை தன ஒளிபப்திவாளர்களின் திறமையுடன் செவ்வனே செய்தும் காட்டியுள்ளார்...

ஒவ்வொரு கட்சியும் பார்ப்பதற்கு ஐஸ்வர்யவைவிட அழகாய் இருக்கு...

கதையும் திரைக்கதையும் நமக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்டதல் .. நடித்தவர்களையும் இன்ன பிற விஷங்களையும் அலசுவோம் ...

விக்ரம்
மனுஷன் எங்கட நடிப்பு சோறு கிடைக்கும் என்றே பசியோடு அலைவார் போலும்.. க்ளைமாக்ஸ் சண்டையில் , ஐஸ்வர்யாவிடம் தன கூடவே இருக்க போட் ல சுத்திக்கிட்டே பேசும் இடம், இண்டர்வல் க்கு முன்னால் தன் போட்டோவை பார்த்து சிரிப்பது , ட்டன் ட்டன்ன்ன் , பக் பக் என்று கத்தும் போதும்,, மிரட்டும் போதும், கடைசியில் ஐஸ்வர்யா திரும்பி வரும் போது காட்டும் முகபாவம் எல்லாமே முதல் தரமான நட்டிப்புதான், என்றாலும்
இந்த தாகம் கொண்டு அலையும் நடிகனை மணிரத்தனம் சரியாக வேலை வாங்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது..

பிதாமகனிலும் , பீமாவிலும் இருந்த அந்த நெருப்பு இந்த நடிப்பில் சற்றே குறைவாதை எனக்குப்படுகிறது ..

அபிஷேக் அநேகமாய் விக்ரமை விட நல்லா நடிசிருப்பாருனு நினைக்கறேன்..
நண்பன் முத்துப்பாண்டி ஹிந்தியில் பார்த்துவிட்டு சொல்லும் வரை காத்திருப்போம் ..

ஐஸ்வர்யாராய்
படத்தில் அம்மணியின் ஆளுமைதான் அதிகம் .. காடு மலை எல்லாம் ஏறி இறங்கி கஷ்டப்பட்டு இருக்கார்..விக்ரமிடம் தான் இங்கேயே இருந்தால் அவரை விடு விடுகிறாயா என கேட்பது , ப்ரியாமணியின் பிளாஷ் பேக் கேட்டுவிட்டு சாமியிடம் பேசுவது .. அழுதாலும் சிரிச்சாலும் பாதி மார்பு தெரியும் படியே இருப்பது என தனக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்....

விக்ரமுக்கும் சரி ப்ரிதிவிரஜ்க்கும் சரி இவருடன் நடிப்பதில் அது என்னோமோ சொல்லுவாங்களே வேதியிலோ இயற்பியலோ சற்றே குறைவுதான்.
இதிலும் அபிஷேக் முந்துவார் என்பது என் கணிப்பு ..


ப்ரிதிவி
கதையின் நாயகன் , கதாநாயகன் என்று இரு விஷயம் இருந்தால்.. ப்ரிதிவிராஜ் இந்தப்படத்தின் கதாநாயகன்.. அதாவது நல்லவனாக சித்தரிக்கப்பட்ட ராமன் கதாபத்திரம்.. இவர் எப்போதும் போலவே சிறப்பாக நடித்திருந்தாலும் கை அறுபட்டு தொங்கும் ஒருவனை அறுப்பட்ட கையையே நசுக்கி கோபப்படும் பொழுது நல்லா நடிச்சிருக்கார் .. இதை ஹிந்தியில் விக்ரம் நடிக்கிறாராம் அநேகமாய் விக்ரம் முந்திவிடுவார்.

கார்த்திக் & பிரபு
சொல்லிகொள்ளும் படி ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.. மரத்துக்கு மரம் தாவுவது , ஜீப்பில் மேல படுத்துக்கொண்டு பயணிப்பது, 'கண்டேன் ராகினியை" என்பதால் கார்த்திக் அனுமன்.. என் நேரமும் சாப்பாடு என்றிருப்பதால் பிரபு கும்பகர்ணன் ( அவருதாங்க என் நேரமும் தூங்குவரம்ல...)

ப்ரியாமணி
பரிதி வீரனில் அமீர் காட்சிப்படுத்தி நம்மை கதற வைத்ததை , இந்த படத்தில் ப்ரியாமணி நடித்தே காட்சிப்படுத்துகிறார்... ஆனாலும் தியேட்டரில் பருத்தி வீரனின் வசனத்தை கத்தினார்கள் .... ஒரு வேலை அந்த படத்தை நினைத்தே நடிதிருப்பரோ என்னோவோ ..

இசை -
பாடல்களை விட ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது..
அதும் கடைசியில் விக்ரமை சுடும் போது வேறு இசை இல்லாமல் வெறும் குண்டு துளைக்கும் சப்தம் மட்டும் கொடுத்ததில் அந்தக்காட்சியின் இறுக்கம் அதிகரித்தது..

ஒளிப்பதிவு..
இவர்கள் இல்லையெனில் இந்த படம், பப்படம் ஆகியிருக்கும் ..

வசனம்
சுகாசினி அவர்களே.. படத்திற்கு வசனம் அதிக தேவை இல்லைதான் ... தேவை படும் போதாவது நல்லா இருக்க வேணாமா... சுஜாதா சார் வசனம் எழுதும்பொழுதே மணிரத்னம் படம் என்றால் பக்கத்துக்கு சீட்ல இருக்க ஆளுகிட்ட கேட்டுத்தான் நானெல்லாம் புரிஞ்சுக்குவேன்..
உங்கள தராசின் ஒரு பக்கத்தில் உக்கார வச்சாலும் அடுத்த பக்கம் உக்கார வைக்க தமிழ் திரை உலகில் ஆள் இல்லை என்பதால் .... உங்களை வசனம் எப்படி எழுதுவது என கற்றுக்கொள்ள அண்ணன் பேரரசுவிடம் செல்லுங்கள் எனப்பனிக்கிறேன்...

இயக்கம்

மணிரத்தினத்தின் அணைத்து படைப்புகளும் எனக்குப்பிடிக்கும்.. இந்த படமும் நல்லாத்தான் இருக்கு....

மணிரத்னம் அவர்களே இந்தப்படத்தில் நீங்கள் ஒரு படைப்பாளியாக என்ன செய்து உள்ளீர்கள் என்பதுதான் என் ஆதங்கக் கேள்வி..! உங்களிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளது அதை ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன் .

படம் பார்த்து விட்டு வெளியில் வந்த உடன் அடுத்த ஷோ விற்கு நிற்கும் ரசிகன் என்னிடம் கேட்டான்...
படம் எப்படி இருக்கு என்று .....
நான் ' பார்க்கலாம்' என்றேன்..

நான் 'சூப்பர இருக்குனு ' சொல்லியிருக்க வேண்டாமா ..!

நீதி---தியேட்டருக்குப் போய் பார்க்க வேண்டிய படம் தான்....

Monday, June 14, 2010

கவிதைன்னு நீங்க சொன்ன கவிதைதான்.....

நானும் எங்கேனும் .....

நானும் தேசிய நெடுஞ்சாலையிலோ, புகை வண்டியிலோ , விமானத்திலோ பயணம் செய்பவன்...
நானும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன்..
நானும் கடைசி ஓவரை நகம் கடித்து பார்க்கும் பலகீனமானவன்..
நானும் நிலத்தகராறில் என் சகோதரனுக்கு எதிரானவன்....
நானும் கூட்ட நெரிசலில் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்பவன்....

அட இவ்வளவு ஏங்க...?.....

நானும் அடுத்தவன் மனைவியை கள்ளக்காதலிப்பவன்.......

நானும் நானும் நானும் நானும் நானும் ........
இப்படி எத்தனையோ நானும்கள் எனக்குள்ளும் இருப்பதால்...
தயை கூர்ந்து நண்பர்களே .....
தினமும் செய்தித்தாள் படியுங்கள்........

நானும் எங்கேனும் என்றேனும் செய்தியாக வரலாம்.....!

Saturday, June 5, 2010

யானுகா ....



நான், தொலைகாட்சி பெட்டி , ஆனந்தவிகடன் , குமுதம், காலி குவாட்டர் பாட்டில்கள் , சிகரட் பெட்டிகள், படிக்கலாம் என்று எப்பொழுதோ என் ஊர் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம்கள், நான் படித்து ரசிதத்தைவிட புத்தகங்களை கடித்து ருசித்த சில கரப்பான் பூச்சிகளும்தான் இருக்கின்றோம் என் அறையில் ...! எப்பொழுதேனும் நண்பர்கள் வந்து செல்வதுமுண்டு ...

அன்றும் நான் வழக்கம் போல் குவாட்டர் குடித்து விட்டு டி வி பார்த்துக்கொண்டிருந்தேன்... இரவு மணி பத்தரை இருக்கும்.... என் செல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது..

என் தோழி தான் அவள் போனில் பாலன்ஸ் இல்லேன்னா யார்கிட்டையாவது போன் வாங்கி கால் பண்ணுவா என்று எண்ணிக்கொண்டே ஆன்சர் பட்டனை அமுக்கி 'ஹலோ" என்றேன் ..

எதிர் முனையும் "ஹலோ " என்றது ..

குரல் என் தோழியின் குரல் போலவே இருந்ததால் ....

'சொல்லு லூசு என்ன இந்நேரத்துல கால் பண்ற ' என்றேன்
'என்னது லூசா ....?" என்று எதிர்முனை துண்டிக்கப்பட்டது ...

என் தோழி அழைக்கின்றாள் பிறகு கட் பண்றாள்... என்று யோசித்து கொண்டிருக்கும்பொழுதே மீண்டும் அழைப்பு வந்தது அதே எண்ணிலிருந்து..

"ஏன் லூசு கட் பண்ணுன ?'

''என்ன லூசா ...?" கட் ஆகியது ...

இந்த முறை எனக்கு உரைத்தது இவள் என் தோழி இல்லை என்று..

சும்மாவே புள்ளைக நம்பருக்கு அலையிற பய நானு.. இப்போ அதுவா வந்திருக்கு.. அதும் குவாட்டர் சிங்கம் வேற என்னுள்ளே குத்த வச்சு உக்காந்துருக்கு ... ..அந்த எண்ணிற்கு நானே அழைத்தேன் ...

'ஹலோ'

"ஹலோ"

'யாருங்க நீங்க கால் பன்றிங்க பேசுன கட் பண்ணிடுரிங்க..?'

"ஐயோ.. ஸாரி , ஸாரி நான் எங்க அக்காவிற்கு கால் பண்ணினேன் உங்களுக்கு தவறாக வந்துவிட்டது ஸாரி ஸாரி .." என்றாள் கொஞ்சும் தமிழில் ....

எதோ ஸ்டைல் தமிழ் பேசுற புள்ளைகளா இல்ல மலையாள பெண்ணா இருக்கும் என்று எண்ணிக்கொண்டே ...

'இட்ஸ் ஓகேங்க . நம்பர் பாத்து டயல் பண்ணுங்க ' என்று துண்டித்தேன் ..

பகீரென்றது பத்து ரூபாய் கட் ஆகியிருந்தது .... அப்பொழுதுதான் அந்த நம்பரை உற்றுப்பார்த்தேன் 94 என்று ஆரம்பித்திருந்தது... இது எதோ வெளிநாடு போல .. என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த நம்பர்ல இருந்து ஒரு எஸ் எம் எஸ் வந்தது " ஸாரி' என்று..

ரிப்ளே பண்ணாம மிஸ்டு கால் குடுத்தேன் ....

அழைப்பு வந்தது.....

'ஹலோ'

'ஸாரிங்க'' என்றாள் மறுபடியம் ..

'இட்ஸ் ஓகேங்க நானும் en ப்ரண்ட் வாய்ஸ் மாதிரி இருக்கவும் தான் லூசு என்றேன்'

'உங்கள் பெயர் என்ன' என்றாள்


'சிவகுமார் ... உங்கள் பெயர்..?'

'யானுகா"

'எங்கே இருந்து பேசுறிங்க உங்களுக்கு கால் பண்ணின பத்து ரூபாய் கட் ஆகுது '

''ஸ்ரீலங்கா '' என்றாள் ....

எனக்குள் இருந்த குவாட்டர் சிங்கம் என் தமிழ் மான இன உணர்வுகளை தட்டி எழுப்பியது .... சந்தோசப்பட்டேன் .....

'உங்களிடம் பேசுவதில் சந்தோசம்' என்றேன்

'நீங்கள் எங்கே இருந்து பேசுகின்றிர்கள்''

'கோயம்புத்தூர் தமிழ்நாடு '

ஸ்ரீலங்கா ஓகே தமிழ் பெண்ணா சிங்கள பெண்ணா என்ற ஐயத்தில் 'சிறிலங்காவில் எந்த இடம்...?' என்றேன்

" நீங்கள் இங்கே வந்ததுண்டா..? எந்த இடம்ன உங்களுக்கு எப்படி தெரியும் ..? என்றாள்

' என் மக்கள் அங்கே படும் அவலங்களை -டெய்லி பேப்பர் படிக்கின்றோம் நியூஸ் பாக்குறோம் இது கூடவாங்க தெரியாது.. சொல்லுங்க எந்த இடம் என்று ..'

'வவுனியா ' என்றாள்

'பிறகு ஏன் ஸ்ரீலங்கா என்கிறீர்கள் ஈழம் என சொல்லுங்கள்' என்றேன்

அவள் சிரித்துக்கொண்டே " உங்களுக்கு இங்கே ஏதும் சொந்தக்காரர்கள் உண்டா ..?" என்றாள்

'ஏன் நீங்கள் கூட சொந்தம் தான் அதுமட்டுமில்லாது எங்கள் அண்ணன் தமிழின தலைவன் அங்கே தானே இருக்கின்றார் ' என்று என் போதைக்கு பிதற்றினேன் ...

அவள் மீண்டும் ஒரு நமட்டுச்சிரிப்புடன் '' உங்கள் அண்ணன் தான் இப்போ உயிருடன் இல்லையே '' என்றாள்

' நீங்களே இப்படி சொன்னால் எப்படி...... அண்ணன் மீண்டும் வருவார்....!' என்று சற்றே கடிந்தேன் ..

'' வேண்டாம் அவரைப்பற்றி பேசாதீர்கள் ...பேசினால் கட் செய்து விடுவேன்.." என்றாள் கோபமாகவே .....

' ஏன்' என்றேன்

'அவரால்தான் எங்கள் குடும்பத்தில் எல்லாரையும் இழந்தோம் .. '

என்னக்கு சற்றே போதை குறைந்தது போல் இருந்தது ..

'உங்கள் குடும்பத்தில எப்படி களம் கண்டர்களா இல்லை குண்டு வீச்சிலா எப்படி இறந்தார்கள்...? என்றேன்

'களத்தில் இரு அண்ணன்கள், குண்டு வீச்சில் என் அப்பா அம்மா, என எல்லோரும் இல்லை இன்று..'

'ஒரு நல்ல விஷயம் நடக்கனும்ன நாலு இழப்புகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக அண்ணன் மேல் நீங்கள் கோபப்படுவது நியாயம் இல்லை ... அவர் மீண்டும் வருவார் உங்களை கப்பார் ..' என்று வசனம் பேசினேன் போதையில் .....

'' இப்பொழுது நங்கள் நிம்மதியாய் இருக்கோம் உங்கள் அண்ணன் வந்தார்ன அதுவும் போய்டும் ...அவர் வராமல் இருப்பதே நல்லது எங்களுக்கு ...."என்றாள் பரிதாபமாக .....

எனக்கு என்ன பேசுறதுனே தெரியல வாய் அடைத்து கிடந்தேன் ........

இணைப்பு துண்டிக்கப்பட்டது.......

இன்றும் அவள் தொடர்ந்து என்னை அழைத்து பேசுகின்றாள் ,, நானும் அழைத்து பேசுகின்றேன்....எங்களது உரையாடலில் வேற எந்த அண்ணனும் வருவதில்லை .... எங்களின் நட்பு சார்ந்ததாகவே இருகின்றது எங்கள் பேச்சு....எனக்கு தனிப்பட்ட முறையில் அண்ணன் பிடிக்குமேனினும் அவளிடம் அது பற்றி நான் பேசுவதில்லை...


நீங்களே சொல்லுங்கள் அண்ணன் வருவாரா ........?



(படித்தவர்கள் கவனத்திற்கு ---- இது எனக்கு நடந்த அனுபவத்தை சிறுகதையாக்கும் முயற்சி... இது என் கன்னி படைப்பு ... உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் )




Tuesday, June 1, 2010

நாங்களும் எழுதுவோம்ல...

எல்லா வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் வணக்கம்.....
சற்றேறக்குறைய கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக வலைப்பதிவுகளை வாசித்து வந்திருந்தாலும் , ஒரு வலைபூ ஆரம்பிக்க தெரியா அடி முட்டாள்தான் நான். எனினும் எனக்கும் என் நண்பன் முத்துபாண்டிக்கும் ஒரு நெடு நாள் ஆசை வலைபூ ஒன்று ஆரம்பிப்பதாகவே இருந்தது.
(இந்நேரத்தில் இந்த வலைப்பூ ஆரம்பிக்க உதவிய நண்பர் மனோ விற்கு நன்றி பல)

இந்த வலைபூ நான் எழுதுவதின் நோக்கம்
௧. என் கருத்துகளும் மேடை ஏற வேண்டும்.
௨. கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் .
௩. உங்கள் நல்ல கருத்துகளை நான் கற்றுக்கொள்ள வேண்டும்.
௪ . என் எழுதும் பழக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .
௫. உங்கள் அனைவருடனும் செல்ல சண்டையிட வேண்டும்.
௬. இன்னும் பல வேண்டும்கள்......

என் பதிவுகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்

அன்புடன்
பொன்.சிவா