Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடும்.... நானும்..(பாகம் -2)

செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதாவைப்பற்றி ஆங்கிலத்தில் வசை(கவி)பாடிய பெண் கவிஞர்..





நண்பனின் திருமண ஒப்பந்தத்திற்கு சென்றதால் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் ஆரம்ப நிகழ்ச்சிகளை காண இயலவில்லை.. 'இனியவை நாற்பது' எனும் ஊர்வலத்தையவது கண்டு விடலாம் என்று வந்தால் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் வரவே மாலை ஏழு மணிக்கு மேலே ஆகிவிட்டது....
சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே நான் கண்ட காட்சி...
பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள டாஸ்மாகில் 'பார்' இல்லாத காரணத்தால் வெளியூரிலிருந்து வந்திருந்த உடன்பிறப்புக்கள் பலர் தங்களின் தமிழ்ப்பற்றையும் தமிழ் உணர்வையும் குடித்து கும்மாளமிட்டு வெளிப்படிதுக்கொண்டிருன்தனர் .. இரு காவல்க்கரர்கள் அவர்களின் அருகிலேயே நின்று கொண்டு கடமையை கண்ணும் கருத்துமாய் பார்த்ததுதான் கொடுமையின் உச்சம் ..
என் அருகே நடந்து வந்த இரு பெண்மணிகள் அந்தக்கட்சியை பார்த்துவிட்டு ' இதுகெல்லாம் இதுக்குனே அங்கிருந்து வரும் போல ' என்று முனகிக்கொண்டனர்..
ஊர்வலம் நடைபெறுவதால் அங்கிருந்து பேருந்து இல்லை ..என் அறைக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தோம்..

மாநாட்டையும் ஊர்வலத்தையும் பார்த்த மக்கள் எங்களின் எதிர் திசையில் பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.. அவர்களில் பெரும்பாலனோர் கோயம்புத்தூரில் தமிழ் 'குடிக்க' வந்த'கரைவேட்டிகள் தான்...

அன்று நான் கண்ட பெரும்பாலான வாகனம்களில் கருப்பு சிகப்பு கொடிதான் கட்டியிருந்தது.. அனல் ஒரு வாகனத்தில் கூட செம்மொழி மாநாட்டின் இலச்சினையாம் வள்ளுவன் படம் பொறித்த கொடி இல்லை.

மக்கள் கூட்டம் அதிகமாகவே வந்திருப்பதை உணர்ந்தேன்..வந்திருந்த உடன் பிறப்புகள் 'கலைஞர் ,ஸ்டாலின் ,எல்லோரையும் வாழ்கவென' கத்திக்கொண்டே சென்றாலும் .. பெண்கள் ஊர்வலத்தில் தாங்கள் ரசித்த வண்டிகளைப்பற்றி பேசிக்கொண்டு சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது..

நங்கள் செல்வதற்குள் ஊர்வலம் முடிந்து விட்டதால் .. நாளை மாநாட்டிற்கு செல்லலாம் என்றவாறே அறைக்கு வந்தோம்...

இரண்டாம் நாளன நேற்று காலை 'லாரன்சின் மாற்றுத்திறனாளிகளின்' நடன நிகழ்ச்சி காணலாம் என்ற ஆவல் இருந்தது ..வேலை நிமித்தமாய் இருந்ததால் செல்ல முடியவில்லை....
மதியம் ஒரு மணிக்கு தான் சென்றோம்..செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டமும்,வாகன நெரிசலும் .. இன்றும் அனேக வண்டிகள் கருப்பு சிகப்புக்கொடியுடன் தான் வளம் வந்துகொண்டிருந்தன..

மாநாட்டின் நுழைவாயிலில் நுழைந்ததும் 'சங்கர் படம் ' போல் ஒரு பிரமாண்டத்தை உணர முடிந்தது..

நுழைவாயிலின் இடது புறம் 'செம்மொழியான தமிழ் மொழியே' எனும் வாசகம் கம்பீரமாய் காட்சியளிதுக்கொண்டிருந்தது.. மக்கள் அதனை பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர்..அதனைதொடர்ந்து உணவகங்கள் ... எல்லா உணவங்களுக்குளும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது.. மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.. வெளியூரில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது..




அதைதொடர்ந்து வலப்புறம் மாநாடுப்பந்தளுக்குள் நுழைந்தோம் .. 'கவிகோ'அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது..
நாங்கள் செல்கையில் வ.மு.சேதுராமன் கவிதை வாசித்தார் என்று சொல்வதை விட கலைஞரின் துதி பாடினார் என்று சொல்வதே சாலச்சிறந்தது,
என் கூட வந்த சரவணன் கொஞ்சம் கோபக்காரன் வேற ..அவன் கேட்டான் 'கலங்கற பாராட்டடும் வேண்டாம்னு சொல்லல அதற்காக எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டுவிட்டு அவரையே புகழ்ந்திட்டுர்ந்த என்ன அர்த்தம் - அட வா போலாம் மச்சான் ' என்றான் கோபமாக.. இருடா அடுத்த ஆளைப்போர்ப்போம் என்று அவனை இருக்க வைத்தேன் ..

அடுத்து வந்த பெண் கவிஞர் ..முதலில் கவியரங்க தலைவர் 'கவிகோ'வை தான் புகழ்ச்சியால் குளிக்க வைத்து விட்டு பின் தன் கழகத் தலைவரை ..
'மூத்த மகனோ உரம்..
இளைய மகனோ வரம்...
பேரன் பேத்திகள் விழுதாக..
நீ ஒரு ஆழ மரம் ..'

துதி பாட ஆரம்பித்தார் .. பின்

'நிலவை சுற்றித்தான் நட்சத்திரம் இருக்கும்
ஆனால் இங்கோ சூரியன் உன்னை சுற்றித்தான்
நட்சத்திரங்கள் நாங்கள் இருகின்றோம் ' என்று திரையுலகம் தலைவரைப்போற்றுவதை சொன்னார்..

சரவணன் கடுப்பாகி வா மச்சான் போலாம் என்றான் ..
இருடா என்றேன்..

அதன் பின் அந்தப் பெண் கவிஞர் வாசித்தார் பாருங்கள்..

நீ அடிக்கடி போகிறாய் ஸ்டேட்....
இப்படி சென்றால் என்னாவது என் ஸ்டேட் ..

என்றாரே பார்க்கலாம் கூச்சத்தில் நான் நெளிவதை தவிர என்னால் என்ன செய்துவிட முடியும் ..

தி மு க காரணயிருந்தால் கை தட்டியிருப்பேன் . அ தி மு க காரணயிருந்தால் கல்லெடுத்து எறிந்திருப்பேன் ..
என்ன செய்ய தமிழனாய் பிறந்ததால் கவி பாடிய அந்தப்பெண்ணை மனதிற்குள் கெட்ட வார்த்தையால் திட்டியாவரே வெளியே வந்து விட்டேன் ..

பின்ன என்னங்க நீங்களே சொல்லுங்க ..

கலைஞர் ஆட்சில செம்மொழி மாநாடு நடக்குது அவரை புகழட்டும் , ஒரு வேலை அந்த அம்மாவை கூட இப்படித்தான் தஞ்சாவூரில் புகழ்ந்திருக்கலாம் ..
இங்கே அந்த அம்மாவை குறை கூறும் அரசியல் எதற்கு.. ஒரு வேலை சென்ற உலகத் தமிழ் மாநாட்டில் உங்கள் தலைவரை இப்படி எள்ளி நகையடினர்களோ..?
இல்லை உங்கள் தலைமை இப்படி கவி பாட சொல்லியதோ ..? அப்படியே சொல்லி இருந்தாலும் ஆங்கில வார்த்தையில் ஏன் செம்மொழி மாநாட்டில் கவிதை ..?

இதே கருத்தை

நீ அடிக்கடி போகிறாய் கொடைநாடு..
இப்படி நீ சென்றால் என்னாவது என் நாடு ..

என்று எழுதியிருக்கலாம் அல்லவா ..!

அந்த பெண் கவிஞரின் பெயர் ஆண்டாள் பிரியதர்சினி யோ ..! இல்லை கல்ப்பாக்கம் ரேவதியோ .. இந்தக் கோபத்தில் மறந்துவிட்டேன்..

கடுப்பாகி வெளியில் வந்தோம் ....
இணைய தள கண்காட்சி அரங்கில் கூட்டமாய் இருந்ததால் நாளை வரலாம் என்று மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்தோம் .. எதிர் புறம் உள்ள மைதானத்தில் இனியவை நாற்பதில் ஊர்வலம் வந்த அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்... அதைப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்......

வரும் வழியில் சரவணன் ' .. 'எப்படியோ ' தமிழ் செம்மொழியானது எதற்கு பயன்படுதோ இல்லையோ ..இன்னும் மூன்று நாட்கள் கலைஞரை பாரட்ட பயன் படும்..'' என்று சொல்லியவரே ...
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' பாடத் தொடங்கினான்....


பின் குறிப்பு - செம்மொழி மாநாட்டில் என்னைக்கவர்ந்த இனியவை நாற்பது எனும் அலங்கார ஊர்திகளை படத்துடன் அடுத்த பதிவில் இடுகிறேன்.....


















12 comments:

ஜானகிராமன் said...

நல்ல பதிவு. கலைஞரோட செம்மொழி மாநாட்டுல கலைஞரை புகழ்வதே தமிழைப் புகழ்வதாகும். ஏன் வேறுபடுத்திப் பாக்குறீங்க நண்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

othukku neenga roomleye thoonkirukkalaam

vels-erode said...

அது ஆழமரம் இல்லை தலைவா..ஆலமரம்! ஆல் போல் தழைத்து...ன்னு படிச்சிருப்பீங்களே! தமிழ் மாநாடு போறவங்க கொஞ்சமாவது, (அட மூனாம்ப்பு வரதான்) தமிழ் படித்திருப்பது சாலச் சிறந்தது. உங்களுக்கெல்லாம் எத்க்கு இந்த வேலை? கண் இல்லாத கஸ்மாலம் கண்ணாலத்துக்கு போன கதையா.....வர்ட்டா.....!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்ல வேளை நான் கோவை வரல..
நான் வந்து என்னைய டாஸ்மாக் ல
பார்த்துட்டு என்ன சொல்லியிருப்பாங்க
தப்பிச்சேன்.....

ponsiva said...

கருத்துக்கு நன்றி வேலுமணி அவர்களே..
நான் இப்பொழுதுதான் தமிழில் டைப் செய்ய கற்றுவருகிறேன்..
தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் ....சுட்டிக்காட்டுங்கள் தவறை திருத்திக்கொள்கிறேன் ....

நன்றி

ponsiva said...

வேலுமணி அவர்களே

நீ அடிக்கடி போகிறாய் எஸ்டேட்....
இப்படி சென்றால் என்னாவது என் ஸ்டேட்

இப்படி கவிதை பாடுவோரே மாநாட்டு அரங்கில் மேடையில் இருக்கும் பொழுது என்னைப்போல் மூனப்புகூட படிக்காத முட்டாள்கள் மாநாட்டிற்கு செல்வது தவறில்லை .....
அவர் ஆழ மரம் என்றுதான் உச்சரித்தார் என்று நான் வாதட விரும்ப வில்லை...... என் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறேன்

நன்றி.....

பொன்.சிவா

tamil cinema said...

நல்ல பதிவு நன்றி

Jobschennai said...

thanks for sharing this quality content, we will wait for more..

Trisha Tamil Actress said...

I'm a great fan of tamil cinema and your blog is worth the content

Tamil Movie Pictures said...

Thanks for sharing :)

Trisha actress said...

nice tamil cinema news and thanks..:)

anushka shetty said...

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks

Post a Comment