Saturday, June 5, 2010

யானுகா ....



நான், தொலைகாட்சி பெட்டி , ஆனந்தவிகடன் , குமுதம், காலி குவாட்டர் பாட்டில்கள் , சிகரட் பெட்டிகள், படிக்கலாம் என்று எப்பொழுதோ என் ஊர் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம்கள், நான் படித்து ரசிதத்தைவிட புத்தகங்களை கடித்து ருசித்த சில கரப்பான் பூச்சிகளும்தான் இருக்கின்றோம் என் அறையில் ...! எப்பொழுதேனும் நண்பர்கள் வந்து செல்வதுமுண்டு ...

அன்றும் நான் வழக்கம் போல் குவாட்டர் குடித்து விட்டு டி வி பார்த்துக்கொண்டிருந்தேன்... இரவு மணி பத்தரை இருக்கும்.... என் செல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது..

என் தோழி தான் அவள் போனில் பாலன்ஸ் இல்லேன்னா யார்கிட்டையாவது போன் வாங்கி கால் பண்ணுவா என்று எண்ணிக்கொண்டே ஆன்சர் பட்டனை அமுக்கி 'ஹலோ" என்றேன் ..

எதிர் முனையும் "ஹலோ " என்றது ..

குரல் என் தோழியின் குரல் போலவே இருந்ததால் ....

'சொல்லு லூசு என்ன இந்நேரத்துல கால் பண்ற ' என்றேன்
'என்னது லூசா ....?" என்று எதிர்முனை துண்டிக்கப்பட்டது ...

என் தோழி அழைக்கின்றாள் பிறகு கட் பண்றாள்... என்று யோசித்து கொண்டிருக்கும்பொழுதே மீண்டும் அழைப்பு வந்தது அதே எண்ணிலிருந்து..

"ஏன் லூசு கட் பண்ணுன ?'

''என்ன லூசா ...?" கட் ஆகியது ...

இந்த முறை எனக்கு உரைத்தது இவள் என் தோழி இல்லை என்று..

சும்மாவே புள்ளைக நம்பருக்கு அலையிற பய நானு.. இப்போ அதுவா வந்திருக்கு.. அதும் குவாட்டர் சிங்கம் வேற என்னுள்ளே குத்த வச்சு உக்காந்துருக்கு ... ..அந்த எண்ணிற்கு நானே அழைத்தேன் ...

'ஹலோ'

"ஹலோ"

'யாருங்க நீங்க கால் பன்றிங்க பேசுன கட் பண்ணிடுரிங்க..?'

"ஐயோ.. ஸாரி , ஸாரி நான் எங்க அக்காவிற்கு கால் பண்ணினேன் உங்களுக்கு தவறாக வந்துவிட்டது ஸாரி ஸாரி .." என்றாள் கொஞ்சும் தமிழில் ....

எதோ ஸ்டைல் தமிழ் பேசுற புள்ளைகளா இல்ல மலையாள பெண்ணா இருக்கும் என்று எண்ணிக்கொண்டே ...

'இட்ஸ் ஓகேங்க . நம்பர் பாத்து டயல் பண்ணுங்க ' என்று துண்டித்தேன் ..

பகீரென்றது பத்து ரூபாய் கட் ஆகியிருந்தது .... அப்பொழுதுதான் அந்த நம்பரை உற்றுப்பார்த்தேன் 94 என்று ஆரம்பித்திருந்தது... இது எதோ வெளிநாடு போல .. என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த நம்பர்ல இருந்து ஒரு எஸ் எம் எஸ் வந்தது " ஸாரி' என்று..

ரிப்ளே பண்ணாம மிஸ்டு கால் குடுத்தேன் ....

அழைப்பு வந்தது.....

'ஹலோ'

'ஸாரிங்க'' என்றாள் மறுபடியம் ..

'இட்ஸ் ஓகேங்க நானும் en ப்ரண்ட் வாய்ஸ் மாதிரி இருக்கவும் தான் லூசு என்றேன்'

'உங்கள் பெயர் என்ன' என்றாள்


'சிவகுமார் ... உங்கள் பெயர்..?'

'யானுகா"

'எங்கே இருந்து பேசுறிங்க உங்களுக்கு கால் பண்ணின பத்து ரூபாய் கட் ஆகுது '

''ஸ்ரீலங்கா '' என்றாள் ....

எனக்குள் இருந்த குவாட்டர் சிங்கம் என் தமிழ் மான இன உணர்வுகளை தட்டி எழுப்பியது .... சந்தோசப்பட்டேன் .....

'உங்களிடம் பேசுவதில் சந்தோசம்' என்றேன்

'நீங்கள் எங்கே இருந்து பேசுகின்றிர்கள்''

'கோயம்புத்தூர் தமிழ்நாடு '

ஸ்ரீலங்கா ஓகே தமிழ் பெண்ணா சிங்கள பெண்ணா என்ற ஐயத்தில் 'சிறிலங்காவில் எந்த இடம்...?' என்றேன்

" நீங்கள் இங்கே வந்ததுண்டா..? எந்த இடம்ன உங்களுக்கு எப்படி தெரியும் ..? என்றாள்

' என் மக்கள் அங்கே படும் அவலங்களை -டெய்லி பேப்பர் படிக்கின்றோம் நியூஸ் பாக்குறோம் இது கூடவாங்க தெரியாது.. சொல்லுங்க எந்த இடம் என்று ..'

'வவுனியா ' என்றாள்

'பிறகு ஏன் ஸ்ரீலங்கா என்கிறீர்கள் ஈழம் என சொல்லுங்கள்' என்றேன்

அவள் சிரித்துக்கொண்டே " உங்களுக்கு இங்கே ஏதும் சொந்தக்காரர்கள் உண்டா ..?" என்றாள்

'ஏன் நீங்கள் கூட சொந்தம் தான் அதுமட்டுமில்லாது எங்கள் அண்ணன் தமிழின தலைவன் அங்கே தானே இருக்கின்றார் ' என்று என் போதைக்கு பிதற்றினேன் ...

அவள் மீண்டும் ஒரு நமட்டுச்சிரிப்புடன் '' உங்கள் அண்ணன் தான் இப்போ உயிருடன் இல்லையே '' என்றாள்

' நீங்களே இப்படி சொன்னால் எப்படி...... அண்ணன் மீண்டும் வருவார்....!' என்று சற்றே கடிந்தேன் ..

'' வேண்டாம் அவரைப்பற்றி பேசாதீர்கள் ...பேசினால் கட் செய்து விடுவேன்.." என்றாள் கோபமாகவே .....

' ஏன்' என்றேன்

'அவரால்தான் எங்கள் குடும்பத்தில் எல்லாரையும் இழந்தோம் .. '

என்னக்கு சற்றே போதை குறைந்தது போல் இருந்தது ..

'உங்கள் குடும்பத்தில எப்படி களம் கண்டர்களா இல்லை குண்டு வீச்சிலா எப்படி இறந்தார்கள்...? என்றேன்

'களத்தில் இரு அண்ணன்கள், குண்டு வீச்சில் என் அப்பா அம்மா, என எல்லோரும் இல்லை இன்று..'

'ஒரு நல்ல விஷயம் நடக்கனும்ன நாலு இழப்புகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக அண்ணன் மேல் நீங்கள் கோபப்படுவது நியாயம் இல்லை ... அவர் மீண்டும் வருவார் உங்களை கப்பார் ..' என்று வசனம் பேசினேன் போதையில் .....

'' இப்பொழுது நங்கள் நிம்மதியாய் இருக்கோம் உங்கள் அண்ணன் வந்தார்ன அதுவும் போய்டும் ...அவர் வராமல் இருப்பதே நல்லது எங்களுக்கு ...."என்றாள் பரிதாபமாக .....

எனக்கு என்ன பேசுறதுனே தெரியல வாய் அடைத்து கிடந்தேன் ........

இணைப்பு துண்டிக்கப்பட்டது.......

இன்றும் அவள் தொடர்ந்து என்னை அழைத்து பேசுகின்றாள் ,, நானும் அழைத்து பேசுகின்றேன்....எங்களது உரையாடலில் வேற எந்த அண்ணனும் வருவதில்லை .... எங்களின் நட்பு சார்ந்ததாகவே இருகின்றது எங்கள் பேச்சு....எனக்கு தனிப்பட்ட முறையில் அண்ணன் பிடிக்குமேனினும் அவளிடம் அது பற்றி நான் பேசுவதில்லை...


நீங்களே சொல்லுங்கள் அண்ணன் வருவாரா ........?



(படித்தவர்கள் கவனத்திற்கு ---- இது எனக்கு நடந்த அனுபவத்தை சிறுகதையாக்கும் முயற்சி... இது என் கன்னி படைப்பு ... உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் )




3 comments:

Unknown said...

superrrrrrrrrrrrr, very nice, keep it up. all the best. chumma summa illama summa supera iruku

Muthu Pandi said...

Unakkullayum Edo Irundirukku Paren..........

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

..........ச்சும்மாதானே

Post a Comment