Wednesday, June 23, 2010

கவிதைன்னு நீங்க சொன்னா கவிதை தான்....பாகம்-௨

மீண்டும் ஒரு காதல் செய்வோம்

கண்டவுடன் காதல்
கண்ணியமில்லை என்று
கருதி வந்தேன் - உன்னைக்
கண்டவுடன் கண்ணியமாய் இருப்பது
கண்ணியமில்லை எனக் கருதுகிறேன் ..

ஓஓஓஒ....என்று கூட்டத்தின் இரைச்சல்
தனியாய் நான் நடக்கையிலே...
ம்ம்...... என்ற சலனமற்றல் ....
கூட்டத்தில் நான் இருக்கையிலே..!

ஒரு பனிக்கட்டியை
உள்ளங்கையில் வைத்திருக்கும்
உணர்வு எனக்கு-
உன் பக்கத்தில் நான் இருக்கையிலே ..
உள்ளங்கையில் வைத்திருக்கும் பனிக்கட்டி
கொஞ்சம் கொஞ்சமாய் கரைவதைப்போல் உணர்வு ..
உன்னை விட்டு பிரிந்து வந்த பயண நேரத்திலே ...

என்னிடம் தோற்று ஓடும்
என் எதிரியின் கண்ணில் கூட
இனி நீ பட்டு விடாதே - இந்த
அழகுசித்திரவதை என் எதிரிக்கும் வேண்டாம்....


விசாரித்தேன் உன்னை ...
யாரயோ காதலிக்கின்றாயாமே...?
நானும்தான்.....!

'முதல் காதல் தோல்வியில்தான் முடியும் '
என்ற காதல் இலக்கணத்தை நாம் எதற்கு மீற வேண்டும்...?
வா......நம் முதல் காதல்களை முறித்துவிட்டு ....
மீண்டும் ஒரு காதல் செய்வோம்..

ஒரு திருமணம்
இரு காதல் முறிவு
ஒரு காதல் ஆரம்பம் --

எனக் கவிதை படுவோம்...

6 comments:

ஜானகிராமன் said...

இது கவிதைன்னு நான் சொல்லிடுறங்க. (யார் கிட்ட சொல்லனும்?)

Unknown said...

அடடா என்ன ஒரு தத்துவம் , அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் கிளபிட்டமா..இது மாதிரி இன்னும் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் . அப்புறம் கோவை தி முக மாநாடு எப்படி போய்டுருக்கு, அது பட்டி பதிவ் எதிர்பாக்குறேன

ஜிஎஸ்ஆர் said...

\\என்னிடம் தோற்று ஓடும்
என் எதிரியின் கண்ணில் கூட
இனி நீ பட்டு விடாதே - இந்த
அழகுசித்திரவதை என் எதிரிக்கும் வேண்டாம்....\\

நல்லாயிருக்கு நண்பா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//'முதல் காதல் தோல்வியில்தான் முடியும் '
என்ற காதல் இலக்கணத்தை நாம் எதற்கு மீற வேண்டும்...?
வா......நம் முதல் காதல்களை முறித்துவிட்டு ....
மீண்டும் ஒரு காதல் செய்வோம்..//

நல்லாயிருக்கு நண்பா

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு திருமணம்
இரு காதல் முறிவு
ஒரு காதல் ஆரம்பம் --

ஹேமா said...

உங்கள் உணர்வை அப்படியே வார்த்தைகளாக்கி இருக்கிறீர்கள் சிவா.கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோன்னு இருக்கு.ஆனாலும் கவிதை நல்லாயிருக்கு.

Post a Comment